கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எல்லை மூடல் மீண்டும் எதிர்வருகின்ற மார்ச் 21 வரை நீடிப்பு..!!
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எல்லை மூடல் மீண்டும் எதிர்வருகின்ற மார்ச் 21 வரை நீடித்திருப்பதாக கனடிய அரசு தெரிவித்துள்ளது.
கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு இடையிலான அத்தியாவசியமற்ற பயணத் தடை நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொற்றுநோய் காரணமாக மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
11-வது தடவையாகவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லை மூடப்பட்டு முழுதாக ஒரு வருடம் ஆகவுள்ளது.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து வாகனங்கள் எல்லையை கடப்பது போன்ற அத்தியாவசிய வணிக போக்குவரத்துக்களை இது கட்டுப்படுத்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.இருந்தபோது அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த அணைத்து பொருட்களின் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.