+1 514-800-2610

கோவிட்-19 உதவிக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு - சட்டத் திருத்தங்களை முன்வைக்கக் கனேடிய அரசு திட்டம்..!!

2021-02-19 16:41
கனடிய செய்திகள்

கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட பணியாளர்கள்: வேலைவாய்ப்பு இழந்தோர் ; வேலைவாய்ப்பில் தொடர்ந்தாலும் சம்பளம் இன்றி இருப்போர் , சுய தொழில் புரிவோர் , சிறு வணிக நிறுவன உரிமையாளர்கள் , சம்பளம் இன்றிய சுகவீன விடுமுறையில் , சுய தனிமைப்படுத்தலில் அல்லது மருத்துவ தனிமைப்படுத்தலில் இருப்போர் , நோயுற்ற குடும்ப உறுப்பினரைப் பராமரிப்போர் , பாடசாலை மூடப்பட்டுள்ளால் பிள்ளையைப் பராமரிக்கும் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட உதவிகளை அதிகரிக்க கனடிய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில்.....

 

கனேடியர்கள் உடல் நலத்துடனும், பாதுகாப்பாகவும் இருப்பதையும், பணம் இன்றிய நிலைக்குச் செல்லாதிருப்பதையும் உறுதி செய்வதற்கு, கோவிட்-19 உலகத்தொற்றுநோயின் ஆரம்பத்தில் இருந்தே கனேடிய அரசு ஆதரவளித்து வருகிறது. உயிர்களைக் காப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, கடினமான ஆனால் அத்தியாவசியமான பொதுச் சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக நாடு முழுவதிலும் பல பணியாளர்களும், குடும்பங்களும் உறுதியற்ற நிலையை எதிர்கொள்கிறார்கள்.

 

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவும், வேலைவாய்ப்பு, பணியணி மேம்பாடு மற்றும் மாற்றுவலுக்கொண்டோரை உள்ளீர்த்தல் ஆகியன தொடர்பான அமைச்சர் கார்ளா குவால்ட்றோவம் (Carla Qualtrough) - கனடா மீட்சிக் கொடுப்பனவு (CRB), கனடா மீட்சி சுகவீன கொடுப்பனவு (CRSB), கனடா மீட்சிப் பராமரிப்பாளர் கொடுப்பனவு (CRCB) மற்றம் வழமையான வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவு (EI) ஆகியன வழங்கப்படும் வாரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நெறிப்படுத்தல் ஏற்பாடுகளையும், சட்டத் திருத்தங்களையும் முன்வைக்கக் கனேடிய அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று அறிவித்தார்கள்.

 

சில பணியாளர்களுக்கான கொடுப்பனவுகள் மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் முடிவுக்கு வரக்கூடுமென்பதால் இந்த நீடிப்பு, கனடாவின் பொருளாதாரமும் பணியணியும் மீண்டுவரும்வேளையில் அவர்களுக்கு உதவி தொடர்வதை உறுதி செய்யும். கனடா மீட்சி சுகவீன கொடுப்பனவை (CRSB) மேலதிகமாகப் பெறக் கூடியதாக இருக்குமென்பதால் உடல்நலமின்றி வேலைக்குச் செல்வது, உணவுக்குப் பணத்தை உழைப்பது ஆகியவற்றில் எதைத் தெரிவு செய்வதென்ற பிரச்சினை அவர்களுக்கு இருக்காது.

 

முன்மொழியப்பட்ட மாற்றங்கள்:

• கனடா மீட்சிக் கொடுப்பனவு (CRB), கனடா மீட்சிப் பராமரிப்பாளர் கொடுப்பனவு (CRCB) ஆகியன கிடைக்கும் ஆகக் கூடிய காலத்தை விதிமாற்றங்களின் மூலம் 12 வாரங்களால் அதிகரிப்பதால், அது 26 வாரங்களில் இருந்து 38 வாரங்கள் வரை அதிகரிக்கப்படும்.


• தற்போது 2 வாரங்கள் வழங்கப்படும் கனடா மீட்சி சுகவீன கொடுப்பனவு (CRSB) விதி மாற்றங்களின் மூலம் 4 வாரங்களாக நீடிக்கப்படும்.


• 2020 செப்ரெம்பர் 27 ஆந் திகதிக்கும், 2021 செப்ரெம்பர் 25 ஆந் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு வழங்கப்படும் வழமையான வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவு, சட்டத் திருத்தம் மூலம் 24 வாரங்கள் வரையான காலப்பகுதியால் ஆகக் கூடியது 50 வாரங்கள் வரை நீடிக்கப்படும்.

துயர் பகிர்வு

சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada