பஸ்ஸில் 29 வயதான கொரோனா நோயாளியின் சடலம் மீட்பு – பரபரப்பில் இலங்கை..!!
2021-02-17 08:39
இலங்கைச் செய்திகள்
பஸ் வண்டியினுள் மரணமடைந்த இளைஞர் ஒருவருக்கு பி.சி.ஆர் செய்தபோது கொரோனா தொற்று உறுதியான சம்பவம் வடமத்திய மாகாணத்தில் பதிவாகியுள்ளது.
29 வயது நபரே இவ்வாறு தொற்றினால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபர் நேற்று முன்தினம் பஸ் வண்டி ஒன்றிற்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து சடலத்தில் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே மேற்படி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.
குறித்த நபர் வடமத்திய மாகாண அலுவலக உதவியாளராக பணிபுரிந்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அவர் பணிசெய்த அலுவலகத்தில் 25ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.