கனடாவில் கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு - எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்..!!
கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்திருந்தார்.
அதற்கு அமைய எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அமுலாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
இக்காலப்பகுதிக்கான செலவீனத்தினை ஒவ்வொரு தனநபர்களுமே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.அதோடு, சுழற்சி முறையிலான கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவுள்ளனர்.அதன் பின் அவர்கள் கொரோனா சோதனையின் போது எதிர்மறையாக வந்தால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அடுத்த 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனைவிடவும் விமானங்கள் கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாகவே கொரோனா பரிசோதனை முடிவினை காண்பிக்கும் ஆவணத்தினை கையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.