+1 514-800-2610

இந்திய அணியை போல் பாகிஸ்தான் அணி வளர வேண்டும் : இம்ரான் கான் தெரிவிப்பு..!!

2021-02-15 09:34
விளையாட்டுச் செய்திகள்

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்குச் சென்று தொடர்ச்சியாக 2 தொடர்களில் வென்று சாதித்ததையடுத்து இந்திய அணி டாப் அணியாக முன்னேறியதற்குக் காரணம் என்னவென்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனு இந்நாள் இம்ரான் கானும் விளக்கம் அளித்துள்ளார்.


இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இம்ரான் கூறும்போது, “இந்திய அணியை இப்போது பாருங்கள், உலகின் டாப் அணியாகத் திகழ்கிறது. நம்மிடையே நிறைய திறமை இருந்தாலும் இந்தியா அடிப்படை கிரிக்கெட் கட்டமைப்பை வலுப்படுத்தியதால் இந்திய அணி இன்று டாப் அணியாகத் திகழ்கிறது.


கட்டமைப்பை தகுந்த முறையில் உருவாக்கினால் அது வேலை செய்வதற்கு சில நாட்கள் ஆனாலும் திறமைகளைக் கூர்படுத்த முடியும். நம் அணியும் இந்தியா போல் உலகத்தை வெல்லும் அணியாக மாறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

 

இப்போது நம்மிடையே இருக்கும் மாகாண கிரிக்கெட் கட்டமைப்பு வலுவடைந்தால் இன்னும் 2-3 ஆண்டுகளில் இதன் பலன் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.


உள்ளபடியே கூற வேண்டுமெனில் கிரிக்கெட்டை கவனிக்க என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. என்னால் கிரிக்கெட் போட்டிகளையும் பார்க்க முடியவில்லை, நேரம் இல்லை. ஆனால் நம் அடிப்படை கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளது, எனவே இதன் பலன் 2-3 ஆண்டுகளில் கிடைக்கும்.” என்றார்.


இம்ரான் கான் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர், மேலும் உலகின் தலை சிறந்த கேப்டன்களுள் ஒருவர். 1992 உலகக்கோப்பையில் மிகவும் பின்னடைவு கண்ட நிலையிலிருந்து அபார வெற்றி பெற்று உலகக்கோப்பையையே வெல்லச் செய்தவர் இம்ரான் கான்.இவரது கேப்டன்சியில்தான் சிறந்த பவுலர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அப்துல் காதிர், சிக்கந்தர் பக்த், சர்பராஸ் நவாஸ் போன்றவர்கள் ஆடி உலகை அச்சுறுத்தினர்.


அதே போல் மோசின் கான், முடாசர் நாசர், சாதிக் முகமது, ஹாரூன் ரஷீத், போன்ற சிறந்த பேட்ஸ்மென்களுக்கு வாய்ப்பளித்து உருவாக்கியதும் இம்ரான் கான் தான்.2018-ல் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனவுடன் ஐசிசி தலைவராக இருந்த இஷான் மானியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக்கினார்.


அடிப்படைக் கட்டமைப்பை இம்ரான் வலுப்படுத்தினார், அதனால் 16 பிராந்திய அணிகளுக்குப் பதிலாக 6 மாகாண அணிகளாக பிரித்து கட்டுக்கோப்பைப் புகுத்தியுள்ளார் இம்ரான் கான்.எப்போதும் கிரிக்கெட்டை நட்புறவுக்கான ஒரு களமாக பார்க்கும் இம்ரான் கான் இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு போட்டிகள் தொடங்குவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருபவர்.

துயர் பகிர்வு

சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada