கியூபெக்கில் சிகப்பு மண்டல பிராந்தியங்களில் ஊரடங்கு தொடர்ந்து அமுல் - பிரான்சுவா லெகால்ட் தெரிவிப்பு..!!
கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட் கோவிட் - 19 பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் நடைமுறையிலுள்ள ஊரடங்கு தொடர்பான தகவல்களை விளக்கும் முகமாக செவ்வாயன்று ஊடகவியாளர்களுக்கான சந்திப்பிணை ஏற்பாடு செய்தார்.அந்த சந்திப்பில், எதிர் வருகின்ற திங்கள் கிழமை முதல் கியூபெக் மாகாணத்தில் உள்ள அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற வர்த்தக நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்படுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
ஊடகவியாளர்களுக்கான சந்திப்பில் கருத்து வெளியிட்ட முதல்வர் பிரான்சுவா லெகால்ட் ''சமீபத்திய வாரங்களில் நிலைமை மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது , அதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்,ஆனால் நாங்கள் தொடர்ந்தும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எதிர் வருகின்ற பெப்ரவரி 8ம் திகதி முதல் கியூபெக் மாகாணத்திலுள்ள சிகையலங்கரிப்பு நிலையங்கள் , அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்கின்ற கடைகள் மற்றும் அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். அதேவேளை பல்கலைக்கழகங்கள் மற்றும் CEGEP க்கள் படிப்படியாக தனிநபர் வகுப்புகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கியூபெக் மாகாணத்தில் சிகப்பு எச்சரிக்கை அமுலிலுள்ள பிராந்தியங்களில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு தொடர்ந்து அமுலிலிருக்கும் அதேவேளை ஆறு பிராந்தியங்கள் சிவப்பு எச்சரிக்கையிலிருந்து ஆரஞ்சு நிற எச்சரிக்கை பிராந்தியங்களாக வரையறுக்கபடுகிறது. அந்த பிராந்தியங்களில் காஸ்பேசி, லோயர் செயின்ட் லாரன்ஸ், சாகுனே-லாக்-செயின்ட்-ஜீன், அபிடிபி-டெமிஸ்கேமிங், நோர்ட் டு கியூபெக் மற்றும் கோட்-நோர்ட் ஆகியவை உள்ளடங்குகின்றன.
அந்த பிராந்தியங்களில், உணவகங்கள், உடல் பயிற்சி கூடங்கள் மற்றும் உட்புற விளையாட்டு நடவடிக்கைகள் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கும் அதேவேளை ஏற்கனவே அமுலிலுள்ள இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு இரவு 9:30 மணிக்கு பின்னுக்குத் தள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
திரையரங்குகள் பிப்ரவரி 26ம் திகதியன்று அன்று மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.சிவப்பு மண்டல பிராந்தியங்களில் வெளிப்புற குழு நடவடிக்கைகளுக்காக வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த நான்கு பேர் நடைப்பயிற்சி, பனிச்சறுக்கு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஒன்றிணைய முடியும் என்றும், ஆனால் சமூக தூரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று லெகால்ட் தெரிவித்தார்.