பெரும்பான்மையான கியூபெக் மாகாண மக்கள் அரசாங்கம் விதித்த ஊரடங்கு உத்தரவை ஆதரிக்கின்றனர்: கருத்து கணிப்பு மூலம் தெரிவிப்பு..!!
கியூபெக் மாகாணத்தில் கோவிட் - 19 பரவலை கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்பாக பொது மக்களின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்வதற்கான கருத்து கணிப்பினை கனேடிய ஆய்வுகள் சங்கம் (ஏசிஎஸ்) வெளியிடப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாண மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த ஊரடங்கு நடவடிக்கை மாகாணத்தில் COVID-19 வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் என்று நம்பவில்லை என்றும் கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட லெகர் கருத்துக் கணிப்பின்படி, கியூபெக்கர்களில் கிட்டத்தட்ட 74 சதவீதம் பேர் ஊரடங்கு உத்தரவை ஏற்றுக்கொள்கிறார்கள், 19 சதவீதம் பேர் அதை எதிர்க்கின்றனர். அதேவேளை 32% பேர் அதன் செயல்திறனை சந்தேகிக்கின்றனர்.
கியூபெக்கிற்கு வெளியே வசிக்கும் 39% கனேடியர்கள் தங்கள் சமூகத்தில் COVID-19 இன் பரவலைக் குறைக்க ஒரு இரவு நேர ஊரடங்கு உத்தரவு ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று கருதுகின்றனர்.
இது தொடர்பாக லேகர் இணையத்தளத்தில் கருத்து வெளியிட்ட கிறிஸ்டியன் போர்க் கியூபெக் மாகாண மக்கள் ஊரடங்கு ஆரம்பிக்கபட்ட நாள் முதல் ஊரடங்கிணை ஆதரிக்கின்றனர் என்று தெரிவித்தார்.