பிக்பாஸ் டைட்டிலை வென்ற போட்டியாளர் இவரா? இந்த தடவை எதிர்பார்த்தை எதிர்பாருங்கள்..!!
தமிழில் அக்டோபர் 4-ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 4-வது சீசன் நாளையுடன் முடிவடைய உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இறுதிச்சுற்று வரை வந்த கேப்ரியலா கடைசியாக ரூ.5 லட்சம் பணத்துடன் 13-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
மீதமிருக்கும் சோம் சேகர், ஆரி, பாலாஜி, ரியோராஜ், ரம்யா பாண்டியன் ஆகிய இந்த 5 பேரில் ஒருவர் தான் தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனின் வெற்றியாளராவார். இதில் நடிகர் ஆரிக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருவதால் அவர் வெற்றியாளராக அதிக வாய்ப்பிருப்பதாக பிக்பாஸ் பார்வையாளர்கள் கணித்திருக்கின்றனர்.
இந்நிலையில் நமக்கு கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களுள் முதலிடத்திற்கு 11.6 கோடி வாக்குகளும், இரண்டாம் இடத்திற்கு 4 கோடி வாக்குகளும், மூன்றாம் இடத்திற்கு 89 லட்சம் வாக்குகளும் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லாத அளவிற்கு 11.6 கோடி வாக்குகள் பெற்று ஆரி டைட்டிலை ஜெயித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. எனினும் அந்த நெகிழ்ச்சியான தருணத்தில் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரி டைட்டிலை வென்றால் இரண்டாவது, மூன்றாவது இடங்களை பெறப்போவது யார் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சென்று வந்த சுசித்ரா, ஆரிக்கு ஓட்டு போடுங்கள் என வெளிப்படையாகவே கோரிக்கை வைத்திருந்தார்.