+1 514-800-2610

கியூபெக் மாகாணம் முழுவதும் சனிக்கிழமை, ஜனவரி 9 முதல் பிப்ரவரி 8 வரை ஊரடங்கு அறிவிப்பு..!!

2021-01-07 03:46
கியூபெக் செய்திகள்

கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட் கோவிட் - 19 பரவலை கட்டுப்படுத்த நடைமுறைக்கு வரவுள்ள ஊரடங்கு தொடர்பான தகவல்களை விளக்கும் முகமாக புதனன்று ஊடகவியாளர்களுக்கான சந்திப்பிணை ஏற்பாடு செய்தார்.அந்த சந்திப்பில், எதிர் வருகின்ற சனிக்கிழமை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலுக்கு வரும் எனவும் இந்த புதிய கட்டுப்பாடு எதிர்வருகின்ற பெப்ரவரி 8ம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


கியூபெக்கில் ஊரடங்கு உத்தரவின் போது சனிக்கிழமை முதல் பிப்ரவரி 8ம் திகதி வரை, குடிமக்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே செல்ல தடை விதிக்கப்படும் என்று பிரான்சுவா லெகால்ட் புதன்கிழமை அறிவித்தார். இருப்பினும், நுனாவிக் மற்றும் டெரஸ்-க்ரைஸ்-டி-லா-பை-ஜேம்ஸ் ஆகியோரின் பிரதேசங்கள் புதிய உத்தரவால் பாதிக்கப்படாது எனவும் தெரிவித்தார்.


சுகாதாரப்பணியாளர்கள் , மனிதாபிமான காரணங்கள் அல்லது ஒரு அத்தியாவசிய தொழிலாளார்கள் வேலைக்கு வருவதற்கு மாத்திரமே பயணம் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நேரத்தில் நடமாடுபவர்கள் மீது காவல்துறையினர் சட்ட நடவடிக்கை அல்லது 1000 டாலர் தொடக்கம் 6,000 டாலர் வரையிலான அபராதம் விதிக்க நேரிடும் என தெரிவித்தார்.இது தொடர்பான மேலதிக தகவல்களை கியூபெக் மாகாண பொது பாதுகாப்பு அமைச்சர் ஜெனிவிவ் கில்பால்ட் எதிர் வருகின்ற வெள்ளிக்கிழமை தெளிவுபடுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்தியாவசிய மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், இரவு 7:30 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வருவதற்கு முன் ஊழியர்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் வீடு வந்து சேரவேண்டும். அதே வேளை எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களும் திறந்திருக்கும்.


அத்தியாவசியமற்ற வணிக நிறுவனங்கள் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு மூடப்படும்.அதேவேளை சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் கடைகளுக்குள் வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் நுழையாமல், வாசலில் தமது பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதிக்கபடும் என தெரிவிக்கப்படுகிறது.


ஆரம்ப பாடசாலை மாணவர்கள் திங்கட்கிழமை முதல் பாடசாலை விடவேண்டும் எனவும் 5 ஆம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு மாணவர்கள் பாடசாலையின் பொதுவான பகுதிகளில் முகமூடிகளை அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயர்நிலைப் வகுப்பு மாணவர்கள் அடுத்த வாரம் தங்கள் இணையவழி கல்வியைத் தொடர வேண்டியிருக்கும், ஆனால் ஜனவரி 18 ஆம் தேதி மீண்டும் பாடசாலைக்கு வருவார்கள். அவர்கள் வகுப்பில் கட்டாயம் முகமூடிகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


பாடசாலைக்கு மாணவர்கள் திரும்புவது தொடர்பாக கருது வெளியிட்ட பிரான்சுவா லெகால்ட்
"என்னைப் பொறுத்தவரை பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் " என்று ரதெரிவித்தார். “நாங்கள் தொடர்ந்து நம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். தாத்தா பாட்டி மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் குழந்தை பராமரிக்க முடியாது ஏன் எனில் அவர்கள் விரைவாக நோய்த்தாக்த்துக்கு உள்ளாவார்கள் என்பது மிக முக்கியமானது.


சிலர் தங்கள் இளம் குழந்தைகளை பராமரிக்க பெற்றோரை அழைக்கிறார், ஆனால் இந்த காலப்பகுதியில் தினப்பராமரிப்பு நிலையங்கள் அனைவருக்கும் திறந்திருக்கும் என்று தெரிவித்தார்.


பனிச்சறுக்கு மற்றும் வெளிப்புற விளையாட்டு அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கள், மதுபான சாலைகள், உடல்பயிற்சி கூடங்கள் மற்றும் சிகையலங்கரிப்பு நிலையங்கள் மூடப்படும்.

சமய வழிபாட்டுத் தலங்கள் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை மூடப்படும், மரணச்சடங்குகளில் அதிகபட்சம் 10 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

உட்புற மற்றும் வெளிப்புற ஒன்றுகூடல்கள் தடை செய்யப்படுகிறது, நூலகங்கள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி