கனடாவில் முதல் முறையாக கியூபெக் - மாகாண அளவிலான COVID-19 ஊரடங்கு அமுலுக்கு வருகிறதா..??
கியூபெக் மாகாணம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு வகையான நடவடிக்கைகளை மாகாண சுகாதார துறை எடுத்தபோதும் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக பிரிமியர் பிரான்சுவா லெகால்ட் இன்று புதன் கிழமை மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கியூபெக் மாகாண பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு குறித்து ஒரு முடிவு அறிவிக்கப்பட்டால், அது கனடாவின் முதல் COVID-19 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மாகாணமாக கியூபெக் இருக்கும் என தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ்தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சியில் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகள் மற்றும் அமெரிக்க நகரங்களும் கடந்த காலத்தில் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன.
லா பிரஸ் செய்தி சேவையின் அறிக்கையின்படி, கியூபெக் மாகாண அரசு திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்னர் மாகாண காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளுடனும் ஆலோசித்து வருவதாகவும் இது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளிவரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.