தமிழின அழிப்பு தொடர்பான தனி நபர் சட்டவரைபான -104 வரைபுக்கு எதிராக இலங்கை பாராளுமன்றத்தில் போர்க்கொடி..!!
ஒண்டாரியோ - ஸ்காபரோ ரூஜ் பார்க் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் தமிழின அழிப்பு தொடர்பான தனி நபர் சட்டவரைபான (Bill )104 தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரம் (Tamil Genocide Education Week Act) ஐ சட்டமாக்கும் கடுமையாக ஈடுபட்டு வரும் வேளையில் ஒண்டாரியோ பழமைவாத காட்சியும் மற்றும் ஒண்டாரியோ மாகாண முதல்வரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வரைபை ஒண்டாரியோ மாகாண பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு, கனடாவுக்கான இலங்கை தூதரகம் மற்றும் கனடாவாழ் சிங்கள சமூக புத்தி ஜீவிகளும் கடும் முயற்சி எடுத்து வருகின்ற வேளையில் ஸ்காபரோ ரூஜ் பார்க் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் இவைகளை தர்த்தெறிந்து நிறைவேற்றுவதில் கடுமையாக பாடுபடுவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கனடாவின் ஒண்டாரியோ பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் சட்ட மசோதா இலங்கையில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கிறது என தெரிவித்தது தோப்பெறும் வேடிக்கையாக இருக்கிறது.
இது தொடர்பாக மிகவும் காரமாக முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் பதிவிட்டுள்ளார்.அவர் தனது பதிவில் இவ்வாண்டின் முதல்நாள் (05/01/2021) பாராளுமன்ற கூட்டத்தில், சற்றுமுன் சபையில் நான் இந்நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது???>
கனடாவின் ஒண்டாரியோ பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் ஒரு சட்ட மசோதா, இலங்கையில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டை அழிக்கிறது என ஆளும் கட்சி பாஉ சுரேன் ராகவன் சற்று முன் சொன்னார்.
ஒன்டாரியோ பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டம் பற்றி எனக்கு தெரியாது.
ஆனால் இங்கே நான் முதலில் சுரேன் ராகவனிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.
இந்நாட்டில் இன்று எங்கே ஐயா, தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது? ஒன்டாரியோ பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து அழித்து ஒழிக்க இந்நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கிறது? சொல்லுங்கள், பார்ப்போம்..!
கடந்த அரசின், தேசிய நல்லிணக்கத்துக்கு பொறுப்பான அமைச்சராக நானே இருந்தேன். இன்று உங்கள் அரசு அந்த அமைச்சையே அழித்து விட்டதே. இந்நிலையில் இன்று இந்நாட்டில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கிறது?
"ஒரே நாடு, ஒரே சட்டம்" என உங்கள் அரசு சொல்கிறது. ஆனால் சிறைத் தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்கிறது. ஆனால் 20, 25 ஆண்டுகள் சிறையில் வாடும் தமிழ் கைதிகளுக்கு அது கிடைப்பதில்லை.
இந்நாட்டில் சிங்களவருடன் சேர்ந்து வாழவே தமிழரும், முஸ்லிம்களும் விரும்புகிறோம்.
ஆனால், உங்கள் சட்டம் சிங்களவருக்கு ஒன்று, தமிழருக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு என்றல்லவா இருக்கிறது?
இதுவா தேசிய நல்லிணக்கம், சுரேன் ராகவன்? இந்நாட்டில் இன்று தேசிய நல்லிணக்கம் இல்லை. தேசிய ஒருமைப்பாடு அமைச்சு இல்லை. மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம். சும்மா, இந்த அரசில் இல்லாத ஒன்றிற்காக மாரடிக்க வேண்டாம். மாரடிக்க வேண்டாம். மாரடிக்க வேண்டாம்.என்று தெரிவித்துள்ளார்.