தமிழ் இளைஞனின் உயர்கல்விக்காக 20,000 டொலருக்கு மேல் நிதி திரட்டிய கனடியர்கள்..!!
ரொறொன்ரோ புறநகரான வாண் பகுதியில் ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ தேநீர் கடையில் பணி புரிகின்ற யோர்க் பல்கலைக்கழகத்தில் தகவற்தொழில்நுட்ப இளமாணிப் படிப்பை மேற்கொள்கின்ற மாணவரான விஷ்ணுகோபன் சோதிலிங்கம்.
காலையில் கோப்பி வாங்குவதற்கென வாகன வரிசையில் வருபவர்களுக்கு கோப்பியுடன் மகிழ்ச்சி கலந்த வரவேற்பையும் கொடுத்து அவர்களது முழு நாளையும் உற்சாகமாக ஆக்கிவிடுவதில் விஷ்ணு படு சுட்டி. விஷ்ணு இந்த முகமலர்ந்த வரவேற்புடன் கூடவே அன்றய பிரதான செய்திகளையும், காலநிலை அறிவுப்புக்களையும் தருகிறார்.
யோர்க் பல்கலைக்கழகத்தில் தகவற்தொழில்நுட்ப இளமாணிப் படிப்பை ஆரம்பித்த விஷ்ணுகோபன் பண கஷ்டத்தால் படிப்பைத் தொடரமுடியாமல் ரிம் ஹோர்ட்டனில் வேலைக்குச் சேர்ந்த விடயத்தை அறிந்த மத்தியூ ஷுல்மான் என்ற வாடிக்கையாளர் அறிந்துவிட்டார்.
இதனை அறிந்த மத்தியூ ஷுல்மான் எந்த வகையிலாவது விஷ்ணுகோபன் கல்வியைத் தொடர்வதற்கு தன்னால் ஆன உதவியை செய்யவேண்டும் என்று எண்ணி அவரது கல்விக்காக ‘GoFundMe’ மூலம் “Vishnu The Tim Horton’s Happy Fist Bumper!” என்ற பெயரில் மூலம் நிதி சேர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
விஷ்ணுகோபன் கல்வித்திட்டத்துக்காக ஷுல்மான் சேகரிக்க உத்தேசித்த தொகை $10,000 டாலர்களாகும். இன்றைய திகதி வரை 20,913 டொலர்கள் வரை சேர்ந்துவிட்டது. இந்த தொகையினை 618 பேர் இதுவரை தங்களது பங்களிப்பை வழங்கியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘GoFundMe’ மூலம் சேகரித்த 10,000 டாலருக்கான முதலாவது காசோலையை மத்தியூ ஷுல்மான்,விஷ்ணுகோபனிடம் நெகிழ்வுடன் கையளித்தார்.
இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த விஷ்ணுகோபன் “நான் செய்யும் அற்ப விடயங்களைக்கூட மக்கள் எவ்விதம் மதிக்கிறார்கள் என்பதைக் காண ஆச்சரியமாக இருக்கிறது. நான் மக்களை நேசிக்கிறேன். மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுவே என்னால் மக்களுக்கு தரக்கூடிய பிரதியுபகாரம் என்று தெரிவித்தார்.