+1 514-800-2610

வெஜிடபிள் டம்ப்ளிங்ஸ் !!

2023-12-06 00:25
ஆரோக்கியம்

தேவையான பொருட்கள்:
காலிபிளவர்- கால் கப் (பொடிதாக நறுக்கியது)
கேரட்- கால் கப் (பொடிதாக நறுக்கியது)
முட்டைகோஸ்- கால் கப் (பொடிதாக நறுக்கியது)
காளாந் கால் கப் (பொடிதாக நறுக்கியது)
பனீர்- கால் கப் (பொடிதாக நறுக்கியது)
வெங்காய தாள்- ஒரு கப் (பொடிதாக நறுக்கியது)
மிளகு தூள்- ஒரு ஸ்பூன்
வெள்ளை எள்- ஒரு ஸ்பூன்
தக்காளி சாஸ்- ஒரு ஸ்பூன்
சோயா- சாஸ்- ஒரு ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
பச்சைமிளகாய்- 1 (நறுக்கியது)

செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும்.அது பச்சைவாசனை போகும் அளவுக்கு வதக்கி அதன்பிறகு பொடித்தாக நறுக்கி வைத்துள்ள காய்கறி கலவைகளை போட வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு,மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து அதிகமான தீயில் வைத்து நன்றாக கிளர வேண்டும்.அதன்பிறகு ரைஸ் பேப்பர் ஷீட்டை எடுத்து ஒரு பிளேட்டில் தண்ணீரை ஊற்றி அதில் ரைஸ் பேப்பரை மூழ்க வைத்து எடுத்து ஒரு பிளேட்டில் வைத்து அதன் நடுவே வைத்து ஸ்பிரிங் ரோல் போன்று ரோல் செய்ய வேண்டும். இப்படியே அனைத்தையும் ரோல் செய்து வரிசையாக அடுக்கிக் கொள்ள வேண்டும்.

இப்போது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த டம்ப்ளிங்ஸ்களை போட்டு வறுத்து எடுக்க வேண்டும். எல்லா புறமும் திருப்பி திருப்பி போட்டு வறுக்க வேண்டும்.

சோயா டிப்பிங்
தொட்டுக்கொள்வதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சோயா சாஸ், ஒரு ஸ்பூன் தக்காளி சாஸ்,கால் டீஸ்பூன் வெள்ளை எள் மற்றும் வெங்காயதாள், சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து எடுத்தால் சுவையான டிப்பிங் தயார். இது டம்ப்ளிங் தொட்டுக்கொள்வதற்கு மிகவும் ஏற்றது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி