+1 514-800-2610

வெளிநாடுகளில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்களை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023-12-03 13:51
உலகச் செய்திகள்

வெளிநாடுகளில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்களை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் முடிந்த பிறகு, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மீரின் வழியைப் பின்பற்ற இப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாகவும்,

இதன்படி, இஸ்ரேல் எதிரிகள் எந்த நாட்டில், எந்த கண்டத்தில் இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கொலை செய்ய 'ஆபரேஷன் ராத் ஆப் காட்' போன்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக துருக்கி, லெபனான் மற்றும் கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களை ஒழிப்பதற்கான திட்டத்தை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த திட்டம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என் மொசாட் அமைப்பின் முன்னாள் இயக்குநர் இப்ரெய்ம் ஹலெவி தெரிவித்துள்ளார்.

மொசாட் உளவு அமைப்பு தயாரித்துள்ள பட்டியலின்படி, இஸ்மாயில் ஹனியே, முகம்மது டெய்பி, யாயா சின்வார் மற்றும் காலித் மஷால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி