+1 514-800-2610

மாதுளம் பழத்தின் மருத்துவகுணங்கள்....

2023-12-02 23:35
ஆரோக்கியம்

உடல் எடை குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்

நோயினால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்கள் தினமும் மாதுளம் பழம் சாப்பிட்டு வரும் போது உடல் வலிமை பெறும்.

இனிப்பு மாதுளையை சாப்பிட்டு வரும்போது இதயமும், மூளையும் வலிமை பெறும். அதுமட்டுமில்லாமல் பித்தம், இருமல் ஆகியவற்றை போக்கும்.

புளிப்பு மாதுளை சாப்பிட்டால் தடைபட்ட சிறுநீரை வெளியேற்றும் மற்றும் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

சருமத்தை பராமரிக்கக்கூடியதில் மிகவும் முக்கியமானது வைட்டமின் ஈ. இது மாதுளம் பழத்தில் அதிகம் இருக்கிறது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்

இவற்றின் தோலை காய வைத்து பொடி செய்து பாசிப்பயறு மாவு சேர்த்து குளித்தாலும் அல்லது முகத்தில் பூசிக்கொண்டாலோ உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

மாதுளம் பழத்தில் பொட்டாசியம், கல்சியம், விட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் நார்சத்து போன்றவை இருக்கின்றது. இது கருவுற்ற பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது

மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வரும்போது மலச்சிக்கல் நீங்கும்.

மாதுளம் பழம் சாற்றை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வரும்போது மாதவிடாய் பிரச்சினை நீங்கும்.

மாதுளை தலையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கச்செய்கிறது. இதில் உள்ள தனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் தலைமுடியை அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வளரச்செய்கிறது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்