+1 514-800-2610

இலங்கை யுத்த குற்றவாளிகளை தடைசெய்வது தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்!!

2023-12-02 07:05
உலகச் செய்திகள்

இனப்படுகொலைக்கு காரணமான இலங்கைப் போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது பற்றி கலந்துரையாட பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 05.12.2023 மாலை 2.30 மணிமுதல் 90 நிமிடங்களுக்கு நாடாளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கத்தில் (Westminster Hall) நடைபெறவுள்ளது. இலங்கை முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரத்தின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த 2020 காலப்பகுதியில் இருந்து ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன.

அத்துடன் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோரும் சித்தரவதையால் பாதிக்கப்பட்டோரும் ஒன்றிணைந்து சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சிக்கு சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் பல்வேறு வழிகளில் இப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 2021 இல் சர்வதேச மனித உரிமை அமைப்பான ITJP சவேந்திர சில்வாவின் யுத்தக்குற்றங்களிற்கான ஆதாரங்களை உள்ளடக்கிய 50 பக்க அறிக்கை ஒன்றினை பிரித்தானிய அரசிடம் சமர்ப்பித்து அவரை தடை செய்யும்படி கோரியிருந்தது.

இது போல யூன் 2021 இல் ICPPG இலங்கையில் 2019 முதல் 2021 வரை சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட 200 இற்கு மேற்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து தொடரும் சித்திரவதைகளிற்கு காரணமான சவேந்திர சில்வா பிரித்தானிய அரசினால் தடை செய்யப்பட வேண்டுமென கோரியிருந்தமையையும் குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி