உலகில் 7 அதிசயங்கள் காணப்பட்ட போதிலும் 8வது அதிசயமாக கம்போடியாவின் அங்கோர் வாட் கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவிலே இந்த கோவில் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இந்து மதத்தை கொண்டதாகவும், பின் நாட்களில் பௌத்த மதத்தை தழுவி காணப்படுவதாக அங்குள்ள சிற்பம் மூலம் அறிய கூடியதாகவுள்ளது.
மேலும் இக்கோவில் 400 கிலோ மீற்றர் சதுர பரப்பை கொண்ட மிகப்பெரிய கோவிலாகும். அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடமாக உள்ளதோடு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.