+1 514-800-2610

உடல் ஆரோக்கியம் காக்கும் உணவுகள் ....

2023-11-19 02:55
ஆரோக்கியம்

உடல்நலத்துக்கு முக்கியமானது ஆரோக்கியமான உணவு. இதய நோய்களைத் தடுப்பதற்கும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது சிறந்த தீர்வாக இருக்கிறது.

பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் இதயத்துக்கு நல்லது.

இருப்பினும் ஆரோக்கியத்தை பாதிக்கும் எவ்வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள் .

தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்பதனை தவிர்ப்பது நல்லது . இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியமானது

பழங்களை உண்ணும் போது தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் , சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகளை சாப்பிடக்கூடாது.

அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது .

தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிககாரம், அதிக புளிப்பு போன்றவறை தவிர்ப்பது நல்லது

இவ்வாறாக உடல்நலத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை உட்க்கொண்டு ,கேடு விளைவிப்பவற்றை தவிர்த்து ஆரோக்கியத்தினை மேம்படுத்திக் கொள்ளுங்கள்

 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி