+1 514-800-2610

2030-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை - பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்..!!

2020-11-19 15:54
உலகச் செய்திகள்

இங்கிலாந்தின் புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக 2030-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என அவர் அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்த பாதைக்கு மிகவும் மாறுபட்ட பாதையை எடுத்து இருந்தாலும் இங்கிலாந்து, எதிர்காலத்தை நோக்கி பசுமையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது.

நமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, பூமியின் பாதுகாப்புடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். அடுத்த ஆண்டு கால நிலை உச்சி மாநாட்டை நடத்துவதற்கு நாங்கள் எதிர் நோக்குகையில் பசுமை தொழில்துறை புரட்சிக்கான ஒரு லட்சிய திட்டத்தை நான் வகுக்கிறேன். இது இங்கிலாந்தில் நாம் வாழும் முறையை மாற்றும்.

இது பகிரப்பட்ட உலகளாவிய சவால். உலகின் ஒவ்வொரு நாடும் நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் அடுத்த தலைமுறையினருக்காக பூமியை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

2030-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் மற்றும் வேன்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். இந்தத் திட்டம் இங்கிலாந்தின் தேசிய உள்கட்டமைப்பை மின்சார வாகனங்களுக்கு சிறந்த ஆதரவாக மாற்றுவதில் கவனம் செலுத்தும். இதன் மூலம் சாலைப் போக்குவரத்தை ‘டி கார்போனைஸ்’ (கார்பன் வாயு அளவை குறைத்தல்) செய்த முதல் ‘ஜி7’ நாடாக இங்கிலாந்து திகழும் என்று தெரிவித்தார்.

 

துயர் பகிர்வு

முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada