இந்தியாவில் பேருந்து விபத்து ஒன்று பதிவாகியுள்ளது. ஜூம்மு காஷ்மீர் பகுதியில் 300 அடி பள்ளத்தில் இவ்விபத்து நேர்ந்துள்ளது. மேலும் 55 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாக இந்தியா ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.