+1 514-800-2610

சருமத்தை புது பொலிவடையச் செய்யும் கடலை மா...

2023-11-12 01:30
ஆரோக்கியம்

பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு உண்டு.

கடலை மாவில் சிறிது நீரை கலந்து, முகத்தில் பூசி கொள்ளுங்கள். நன்கு உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

கடலை மாவுடன் கொஞ்சம் வெள்ளரி சாறு கலந்து நன்கு குழைத்து சருமத்தில் பூசவும். பின் இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

குளிக்கும் போது சவர்க்காரத்திற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தி வந்தால், சருமம் வளுவளுப்பாக இருக்கும்.

கடலை மாவுடன், மஞ்சள் மற்றும் 1 தேக்கரண்டி பன்னீர் கலந்து முகத்தில் பூசி கொள்ளுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து, முகத்தை கழுவ வேண்டும்.

கடலை மாவுடன் எலுமிச்சை சாற்றை கலந்து குழைத்து முகம் முழுவதும் பூசி 30 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

வாரத்திற்கு மூன்று முறை மேற்குறிப்பிட்டுள்ளவாறு தொடர்ந்து செய்து வந்தால், சருமம் பொலிவடைந்து செழுமையாக இருக்கும்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி