கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன.
கொய்யாவில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இதனால் செரிமானம், வயிற்றுக்கோளாறு பிரச்சினைகளுக்கு கொய்யாவை சாப்பிடலாம்.
நார்ச்சத்து நிறைந்த கொய்யா மலச்சிக்கல் பிரச்சினையை நீக்க உதவுகிறது. அத்தோடு செரிமானமும் மேம்படும். எனவேதான் மலச்சிக்கல் இருக்கும் போது கொய்யாவை சாப்பிட பல மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.
கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது. உண்மையில், கொய்யா சாப்பிடுவதால் மலச்சிக்கலும் நீங்கும். அதோடு மூலமும் சரியாகலாம்.
மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப் பழத்தை உட்க்கொள்வதால் அனைத்து வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது.
இவ்வாறான நன்மைகளைக் கொண்ட கொய்யாப் பழத்தினை உட்க்கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்