+1 514-800-2610

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவு தொடர்பாகக் கனேடிய பிரதம மந்திரியின் அறிக்கை..!!

2020-11-08 14:58
கனடிய செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவையான நிலையில் பைடன் 290 தேர்தல் சபை வாக்குகள் பெற்றார். ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளை பெற்று தோல்வியைடைந்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதன் மூலம் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வென்றுள்ளார்.

இதனை அடுத்து புதிதாக தெரிவான அமெரிக்கா ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கும் வாழ்த்து தெரிவிக்கும் முகமாக கனேடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவு தொடர்பாகப் பின்வரும் அறிக்கையை நேற்று வெளியிட்டார்:

“ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகவும், துணை ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்ட ஜோ பைடன், கமலா ஹரிஸ் ஆகியோருக்குக் கனேடிய அரசின் சார்பாக நான் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“கனடாவும், அமெரிக்காவும் உலகில் வேறெங்கும் காணப்படாத, தனிச்சிறப்புள்ள உறவைக் கொண்டிருக்கின்றன. எமது சேர்ந்த நிலப்பரப்பு, பொது நலன்கள், ஆழமான தனிப்பட்ட தொடர்புகள் மற்றும் பலமான பொருளாதாரத் தொடர்புகள் எம்மை நெருக்கமான நண்பர்களாகவும், பங்காளர்களாகவும், நேச சக்திகளாகவும் ஆக்குகின்றன. இந்த அடித்தளத்தை மேலும் கட்டியெழுப்பியவாறு கோவிட்-19 உலகத் தொற்றுநோயின் பாதிப்பில் இருந்து எமது மக்களைப் பாதுகாப்பதற்கும், உடல்நலத்தைப் பேணுவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தவாறு, உலகம் முழுவதும் சமாதானம், அனைவரையும் உள்வாங்குதல், செல்வச் செழிப்பு, காலநிலை மாற்றம் என்பன தொடர்பாக நாம் செயலாற்றுவோம்.

“உலகின் மிகப் பெரும் சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ளும் வேளையில், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பைடன், துணை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஹரிஸ் ஆகியோருடனும், அவர்களது நிர்வாகம், ஐக்கிய அமெரிக்க கொங்கிரஸ் ஆகியவற்றுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன். ”

துயர் பகிர்வு

முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada