+1 514-800-2610

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடுகளுக்கான பயணங்களுக்கு தடைவிதிப்பு..!!

2020-10-14 15:55
இலங்கைச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடுகளுக்கான பயணங்களுக்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது நிதியை முறைகேடு செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களை மீறியமை தொடர்பாக ரிஷாட் பதியுதீனை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரைக் கைதசெய்ய ஆறு புலனாய்வுக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரிஷாட் பதியுதீன் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் அவருக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் கணக்காளர் அழகரட்னம் மனோரஞ்சன் கொழும்பு, கிருலப்பனை பகுதியில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அவர், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், ரிஷாட் பதியுதீனை கைது செய்வதில் இருந்து பாதுகாக்க முற்பட்டதாக அவரின் மெய்ப் பாதுகாவலர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதினீன் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் ஆராய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மாஅதிபரின் கண்காணிப்பின் கீழ் இரண்டு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட 60 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதி கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம்.மஹ்தி அறிக்கையின் வாயிலாக கேட்டுள்ளார். 

தங்களது பதவிக்காகவும், இருப்புக்காகவும் சிறுபாண்மை சமூகத்தினரை இலக்கு வைத்து பிழைப்பு நடத்தும் வங்குரோத்து அரசியல் நிகழ்ச்சி நிரல் இந்த ஜனநாயக நாட்டில் இல்லாதொழிக்கப் பட வேண்டும் என கிண்ணியா நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதி கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நிரபராதிகளையும் கட்சித்தலைவர்களையும் சிறைப்படுத்தி குற்றவாளியாக்க முனைவது எதிர்காலத்தில் ஒரு மோசமான அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப் படுத்தக்கூடிய அபாயத்தை உண்டு பண்ணக்கூடும் என நான் கவலைப்படுகிறேன்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ றிசாட் பதியுதீன் மீது கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் அவை அனைத்துக்கும் எதிராக உரிய விசாரணைகள் நடாத்தப் பட்திருந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களமோ, பொலீஸ் திணைக்களமோ, ஆணைக்குழுக்களோ இதுவரை அவரை குற்றவாளியாக காணவில்லை.அனைத்து விசாரணைகளுக்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கிய அவர் முன்னாள் இராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மற்றும் கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரால் புகழாரமும் சூட்டப்பட்டார்.

இவ்வாறான நிலையில் அவரையும் அவரது குடும்பத்தாரையும் வேண்டுமென்றே இன்னல்களுக்கு உள்ளாக்குவதும் அவர்களை கைது செய்ய முயற்சிப்பதும் ஒருவகை அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும்,விசாரணைகளுக்கும் பூரணமாக ஒத்துழைப்பை வழங்கி வரும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களையும் அவரது குடுப்பத்தாரையும் எந்த ஒரு அடிப்படையோ அல்லது குற்றச்சாட்டுகளோ நிருபிக்கப் படாமல் தொடர்ந்தும் இன்னல்களுக்கு உட்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மக்களின் தேவை அறிந்து அதிகமான சேவைகளை செய்து வரும் முன்னாள் அமைச்சரின் செயற்பாடுகளை ஸ்தம்பிதமாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்படும் இவரின் கைதுக்குக்கு பதிலாக என்னை கைது செய்து அவர் மீதான கெடுபிடியை தளர்த்துங்கள் . நாங்கள் சிறை செல்கிறோம். அவரது செயற்பாடுகளை முடக்க முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் நீதியானதும் , நிதானமானதுமான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு

ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
பத்மநாதன் பிறேம்குமார் (பிறேம்)
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
மிரியம் ரஞ்சிதம் தம்பிப்பிள்ளை (றங்கா)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada